நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நாய் 07 குட்டிகளை ஈன்றுள்ளது!

42 0
பொலிஸ்  நிலைய மோப்ப  நாய்  பிரிவின்     கடமைகளுக்காக 58 மில்லியன் ரூபா செலவில் நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட  பொலிஸ் மோப்ப   நாய்களில் ‘இங்கிலீஸ்  ஸ்பானியல்’ ரக பெண் நாய்   கண்டியில் உள்ள  பொலிஸ் தலைமையகத்தில்  நேற்று  செவ்வாய்க்கிழமை  (08)   07  நாய் குட்டிகளை ஈன்றள்ளது.

இந்த ஏழு நாய்க்குட்டிகளின் பெறுமதி ஒரு கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸ்  மோப்ப  நாய்  பிரிவு தெரிவித்துள்ளதுடன், இந்த நாய்க்குட்டிகள்  அனைத்தும் ஒரு மாத காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஏழு குட்டிகளும் தாயும் கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வையில் உள்ளன எனவும்,  தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை  வேறு விலங்குகள் அணுக அனுமதிக்கப்படாது என குறித்த பிரிவின்  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி  காஞ்சன கொடகும்புர தெரிவித்தார்.

நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 35 நாய்கள் 08-12 மாதங்களுக்கு இடப்பட்டவை என்பதுடன்,  ஒரு மாத தனிமைப்படுத்தலின் பின்னர்,  வெடி பொருட்களைக் கண்டறிதல்,   குற்றவியல் விசாரணை மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகள்   தொடர்பான பயிற்சிக்கு அனுப்பப்பட்டு கடமை நடவடிக்கைகளில் இணைக்கப்படும் எனவும்  மேலும் தெரியவருகிறது.