அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

43 0
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது இன்று (10) புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ பாசிப்பயறு 998 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளை கிழங்கு 205  ரூபாவாகவும், ஒரு கிலோ கபில நிற சீனி 375 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை நிற சீனி  263 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.