தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

56 0

தமிழ்நாடு முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.வடக்கு மண்டல ஐஜி நரேந்திர நாயர் சென்னை வடக்கு கூடுதல் ஆணையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மதுவிலக்கு அமலாக்குத்துறை கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அபின் தினேஷ் மோடக் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் நிர்வாக கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிபிசிஐடி ஐஜி அன்பு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கான பொறுப்புகளையும் கவனிக்க உள்ளார்.இதற்கு முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார்.

சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டார் .