எம்பிலிப்பிட்டியவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி

41 0

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் செவ்வாய்க்கிழமை (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் எம்பிலிப்பிட்டியவில் கெல்ல ரக்வானா சாலையில் உள்ள கொலோனா பகுதியில் நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த  அடையாளம் தெரியாத இருவரே  துப்பாக்கிப பிரயோகம் மேற்கொண்டு விட்டுத. தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேயிலைத் தோட்ட உரிமையாளரான 61 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.