சிவகாசி வெடிவிபத்து: நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

36 0

மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது,சிவகாசி அடுத்த காளையார் குறிச்சி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

சிவகாசி பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும், விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.