பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் 8 தடவை வெள்ளை மாளிகை சென்றுள்ளார் ?

47 0

அமெரிக்க ஜனாதிபதி ஜோடைபன் பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்படவில்லை அந்த நோய்க்காக சிகிச்சைபெறவில்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வெள்ளை மாளிகைக்கு ஆகஸ்ட்மாதம் முதல் மார்ச்வரையில் எட்டுதடவைகள் சென்றுள்ளார் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டவர்களின் பட்டியலை அடிப்படையாக வைத்து நியுயோர்க் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகையின் மருத்துவர் கெவின் ஓ கோனர் பைடன் தனது வருடாந்த மருத்துவசோதனைகளிற்கு அப்பால் நரம்பியல் நிபுணர் எவரையும் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நரம்பியல் நிபுணரான கெவின்கனார்ட்  கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் முதல் இந்தவருடம் மார்ச்மாதம் வரை எட்டு தடவை வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதை வெள்ளை மாளிகையின் விருந்தினர் ஆவணம் காண்பித்துள்ளது என ரொய்ட்டரும் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செயற்பாடுகளிற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட  ஆயிரக்கணக்கான பணியாளர்களிற்கு ஆதரவளிப்பதற்கான அவரது நரம்பியல் மருத்துவகிளினிக்குகளிற்காகவே கெவின் கர்னாட் வெள்ளை மாளிகைக்கு சென்றார் ஜனாதிபதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்லவில்லை என வெள்ளை மாளிகையின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்டிரம்புடனான முதலாவது விவாதத்தின்போது பைடன் மிகவும் பலவீனமானவராக  தடுமாறுபவராக காணப்பட்டதை தொடர்ந்து அவர் நோய்பாதிப்பிற்குட்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் அமெரிக்காவில் வலுவடைந்துள்ளன.