மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் ஜோடி உயிர் மாய்ப்பு

47 0

மட்டக்களப்பில் இளைஞன் ஒருவரும் சிறுமி ஒருவரும் தவறான முடிவெடுத்து ஒரே இடத்தில் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இன்று சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெல்லாவெளி, திக்கோடை தும்பாலை கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கெங்கநாதன் ரதன் மற்றும் 16 வயதுடைய புண்ணியமூர்த்தி பேஜினி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திக்கோடை தும்பாலை 4ஆம் வட்டார வீதியில் உள்ள வேம்பு மரத்தில் தூங்கிய நிலையில் பொதுமக்களினால் குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் ஜோடி உயிர் மாய்ப்பு | Died Due To Wrong Decision In Batticaloa

காதல் விவகாரம் காரணமாக குறித்த இருவரும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனவும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.