யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் !

56 0

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியட்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்று  செவ்வாய்க்கிழமை (09)  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து நேற்று  திங்கட்கிழமை (08)  நண்பகல் வெளியேறினார்.

பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை  இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று  திங்கட்கிழமை நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.