அதிபர்கள், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினால் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு!

39 0

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவதன் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

சில பாடசாலைகளில் இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிபர்கள், ஆசிரியர்கள் வருகை தந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது.

பாடசாலைகளுக்கு முச்சக்கர வண்டிகளிலும் பாடசாலை வாகனங்களிலும் வருகைதந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வருகைதராத காரணத்தினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியதையும் காணமுடிந்தது.

தமக்கான நிலுவை சம்பளத்தினை வழங்க கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா




கல்முனை



மட்டக்களப்பு மாவட்டம்


ஓட்டமாவடி

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் மேற்கொண்ட சுகயீன விடுமுறை காரணமாக பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

நீர்கொழும்பு

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் கட்டானை,  நீர்கொழும்பு, ஜா-எல ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலேயே இவ்வாறு கல்வி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

சில பாடசாலைகளில் மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வருகை தந்த போதிலும் ஆசிரியர்கள், அதிபர் வருகை தராததன் காரணமாக அவர்கள் வீடு திரும்புவதை காணக் கூடியதாக இருந்தது.

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, கடற்கரை தெரு சாந்த  செபஸ்தியார் வித்தியாலயம், புனித பீற்றர் கல்லூரி ஆகியவற்றில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.