ஓட்டுமடம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள், இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை அத்துமீறி நுழைந்த கும்பலே வன்முறையில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த, உரிமையாளரின் மகன், யாழில் இயங்கிய வன்முறை கும்பலுடன் முன்னர் சேர்ந்து இயங்கிய நபர் எனவும், தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.