கல்முனையில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் !

49 0

இலங்கை மின்சார சபையின் கல்முனை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மின்சார சபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (09) முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டத்தின் போது 2024 ஆண்டிற்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கு,  சம்பள முரண்பாட்டு தீர்வை உடனடியாக வழங்கு,  வேலை நீக்கம் செய்த 62 தொழிலாளர்களை உடனடியாக சேவையில் இணைத்துக் கொள்,  என பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து அமைதி வழிப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும், மின்சார தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லையாயின் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

இதன் போது சுமார் 50க்கும் அதிகமான  உத்தியோகத்தர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன் இலங்கை மின்சாரத் தொழிற்சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.