வாள், கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் கைது

44 0

கையடக்கத் தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட  தகராறில் வாள் மற்றும் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் மன்னா கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.