பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி வட்டகொடை, தெற்கு மடக்கும்புர தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (9) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தாங்கள் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். 1,700 ரூபாகூட போதாது, எனவே, குறைந்தபட்சமாக கோரப்பட்டுள்ள அந்த தொகையையாவது வழங்குவதற்கு கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.