கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (9) செவ்வாய்க்கிழமை காலை 9.35 மணியளவில் பாணந்துறை ரயில் நிலையத்தில் இருந்து மருதானை ரயில் நிலையத்தை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதுடன் இன்று (9) பிற்பகல் இயக்கப்படவிருந்த பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.