பதுளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; இருவர் காயம்

58 0

பதுளை – மஹியங்கனை வீதியில் பதுளை, மெடிதலே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (09) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

அதிவேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களை செலுத்திச் சென்ற இருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.