இலவச இணைய வசதி வழங்கப்படுவதாக கிடைக்கப் பெறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களாக இலவச இணைய வசதி வழங்கப்படுவதாக கூறி வாட்ஸ் அப் , முகநூல் மெசன்ஜர் மற்றும் கையடக்க தொலைபேசிகளுக்கு பல குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
இவ்வாறான குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் எமது சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்க தொலைபேசியின் தரவுகளை வேறு தரப்பினர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறான குறுஞ்செய்திகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.