மொனராகலை பிரதேசத்தில் இரு வெவ்வேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, மொனராகலை பிரதேசத்தில் கொனகங்ஹார, கும்புக்கன் ஓயாவிற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொனகங்ஹார பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை ஒக்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் கும்புக்கன் ஓயாவிற்கு நீராடச் சென்ற போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மொனராகலை பிரதேசத்தில் எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 6 ஆம் திகதி காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொம்பகஹவெல, மஹாயாய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து தனது வயலுக்கு சென்றிருந்த போதே இவ்வாறு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.