பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகள் கொள்வனவிற்கு இலத்திரனியல் விநியோகமுறை அறிமுகம் செய்ய நடவடிக்கை

58 0

பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறையினை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் அதிவேகவீதிகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.இந்த இலத்திரனியல் விநியோகமுறை இவ்வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.