ஸ்பெயினில் அறிமுகமாகும் பார்ன் பாஸ்போர்ட்.. எதற்கு தெரியுமா?

40 0

இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.

இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது.

ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும்.

விரைவில் இந்த ஆப் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் வயது சரிபார்க்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும்.