சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு

547 0

7411b300-82f8-440b-bb69-56efc0c3ca031பசில் ராஜபக்ஷ முன்வைத்துள்ள பிணைக்கோரிய பதில் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஐந்து பேரையும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

திவிநெகும வேலைத்திட்டத்தின் ஊடாக 43 லட்சம் ரூபாய்களை மோசடி செய்தமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் குறித்த வேலைத்திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த பிணைக்கோரிய பதில் மனுவில், சட்ட மா அதிபர், காவற்துறை மா அதிபர் உள்ளிட்ட ஐந்து பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் ஐந்து பேரும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம்  திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.