1300 ஆண்டுகள் கற்பாறையில் பதிந்திருந்த வாள் திருட்டு: பிரான்ஸ் பொலிஸார் விசாரணை

43 0

பிரான்ஸில் கல்பாறையில் சிக்கி இருந்த 1300 ஆண்டுகள் பழமையான வாள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது.

ரோகாமடோர்(Rocamadour) கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பாறையில் சிக்கியிருந்த பழம்பெரும் வாள்  மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது.

பிரித்தானியாவின் எக்ஸ்காலிபர்(Excalibur) போன்றே பிரான்ஸின் கதைப் பாடல்களில் இடம்பெறும் இந்த வாள் மாய ஆற்றல் கொண்டது எனக் கூறப்படுகிறது.

1300-years-sword-in-france-stolen

திருடப்பட்ட பழங்கால வாள்

திங்கள் கிழமையில், முக்கிய சுற்றுலாத் தளமான ரோகாமடோரில் இருந்து இந்த வாள் திருடப்பட்டது.

இந்த பழைய ஆயுதம் பிரெஞ்சு இலக்கியத்தில் பிரபலமான கதாபாத்திரமான போர் வீரர் ரோலண்டின் பிரதான ஆயுதமாக இருந்தது. அவரிடம் “அழிக்க முடியாத வாள்” இருந்ததாகக் கூறப்படுகிறது.