சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும்

43 0

சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், தகுதி நிலை வைத்தியர்கள் தமது பணிகளை இடையூறின்றி செய்ய உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (05) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பதில் வைத்திய அத்தியட்சகராக மத்திய சுகாதார அமைச்சினால் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்  நிர்வாக திறமையானவர் நியமிக்கப்பட்டமையால் நிர்வாக தரம் அற்ற ஏனையவர்கள்தான் இந்த குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதையும் ஆராய வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது ஆளுநர் கடந்த காலத்தி நிர்வாக தர அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இம்முறை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி விபரங்களை தெரியப்படுத்துவதாக குறிப்பிட்டார்.