பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன் மூலமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இதுவரை 85 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னுரிமையை மாத்திரம் மாற்றுவதற்கு நாளை முதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் பேராசிரியர் சந்தன உடவத்த மேலும் தெரிவித்துள்ளார்