உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்- மு.க.ஸ்டாலின்

26 0

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அறிவாலயத்தின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார்.