சிலாபம் – கொழும்பு வீதியில் விபத்து ; ஒருவர் பலி ; 15 பேர் காயம்

35 0

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (4) வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.