சுற்றிவளைப்பின் போது தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்

42 0

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (03) இரவு சுமுதுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.