பதவிக்காலம் முடிவதற்கு முன் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் – சுமந்திரன் கோரிக்கை !

33 0

சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கு ஜனாதிபதி கூறினார்.  அதனால் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை  (02) இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,  அனுதாபம் தெரிவித்து   உரையாற்றிய பின்னர்  அது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தனின் மறைவு தொடர்பாக அனுதாபம் வெளியிட்டமைக்கு ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனாதிபதி தனது உரையின் போது தானும், சம்பந்தனும் ஒன்றாக பாராளுமன்றம் வந்தமை தொடர்பில் குறிப்பிட்டதுடன்இ சம்பந்தனின் ஆயுட் காலத்திலேயே தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்இ துரதிஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டார் எனவும்  கூறினார்.

இந்நிலையில் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவது என்னவென்றால்,  தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அதாவது இந்த வருடம் ஒக்டோபர் முடிவதற்கு முன்னர் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வினயமாக கேட்கின்றேன். நாட்டு மக்கள் அனைவரும் திருப்தியடையும் வகையில் இந்தப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றார்.