எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இந்தியாவுக்கு வருகை தருமாறு அந்த நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவர் விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பயணத்தின்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயல்படுமாறு வலியுறுத்தப்படும் என நம்பப்படுகின்றது.
இருவரின் இணைவு தொடர்பான இறுதி முயற்சியாகவே சஜித் பிரேமதாஸ இந்தியா வருமாறு அழைக்கப்பட்டுள்ளார் என கொழும்பு உயர் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.