இவர்களிடம் இருந்து 15,700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 47 வயதுடைய ஆண் ஒருவரும் 37 வயதுடைய பதுளை ஹப்புஹின்ன பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் எனவும் இவர்கள் இருவரும் தனது குடும்பத்தினை கைவிட்டுவிட்டு, இவ்விருவரும் கணவன் மனைவியாக பசறை புத்தலை வீதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் பதுளையை அண்மித்த பகுதிகளுக்கு ஹெரோயின் விற்பனை செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் 5000 ரூபாய் பணத்தை easy cash பணம் மூலம் அனுப்பி பசறை பதுளை வீதியில் 7ஆம் கட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரிடம் இருந்து 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பெற்றுக்கொண்டபோது பொலிஸார் அந்த நபரை கைது செய்து அவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து மேலும் 7400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 12000 ரூபாய் பணமும் கையட்டக்க தொலைபேசி ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பசறை புத்தல வீதியில் வாடகைக்கு பெற்றுக்கொண்ட வீட்டில் சோதனையை மேற்கொண்டபோது அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அந்த நபரின் காதல் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.