இலங்கையில் போர்க்குற்றம் குறித்து சர்வதேசம் தலையிட முடியாதாம்

285 0

இலங்கையில் நிலங்களை இழந்த தமிழ் மக்களுக்கு, நிலங்கள் வழங்கப்பட்டு வருகிறது என இலங்கை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த இலங்கை சிறை நிர்வாகம், தமிழர் மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் இந்து விவகாரத்துறை அ்மைச்சர் டி.எம்.சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

இலங்கை வாழ் மக்களுக்கு முக்கியமாக வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு எங்களுடைய அரசு பல உதவிகளை செய்து வருகிறது.முக்கியமாக நிலங்களை இழந்த மக்களுக்கு நிலங்கள் வழங்கப்படு வருகிறது. தற்போது. 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று பல ஆயிரம் நிலங்கள் இராணுவத்தின் வசம் உள்ளது. அந்த நிலங்களையும் நாங்கள் திருப்பி கொடுக்க முன் வருகின்றோம்.இதுகுறித்து இம்மாதம் நான், அனைத்து இராணுவத் தளபதிகளையும் சந்தித்து, அவர்களோடு கம்யூனிச கட்சி பிரதிநிதித்துவத்தையும் சேர்த்து பிரச்சினைகளை முன் வைத்து எப்படி தீர்வு காணுவது என முடிவு எடுக்க உள்ளோம்.

முக்கியமாக யாழ்ப்பாண நகரம் பொருளாதார ரீதியில் முன்வர வேண்டும் என்பது எனது கருத்து. அதற்கு ஏற்ற விதத்திலே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.அந்த நடவடிக்கைகள் குறித்து நான் தற்போது கூற விரும்பவில்லை. அந்த நடவடிக்கைகளை அரசு ஏற்றால்தான் வெளிப்படுத்துவேன்.

பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இந்த அரசு செய்து வருகிறது.ஜனாதிபதி சிறிசேன தலைமையிலும், எங்களது கௌரவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலும் அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

சர்வதேச குற்றப்புகார் குறித்து சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு வெளிநாட்டில் இருந்து தூதுவர்கள் வந்து அதில் கலந்தாலோசிக்க முடியாது.என்னால், இலங்கை வாசிகளும், இலங்கை மக்களும் கலந்தாலோசித்தும் மற்றும் சட்டரீதியாக கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.தமிழகத்தில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். திருப்பதி மற்றும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன்.இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு இலங்கை திரும்ப உள்ளேன் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.