பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த அங்கீகாரம்

14 0
பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரிவெனாக் கல்வியை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்காக தொழிநுட்ப அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து திட்டமிட்டுள்ளது.

அதன் மூலம் பிரிவெனாக்களிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பிக்கு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு இலங்கையின் தேசிய பௌத்த மரபுரிமைகளை ஆராய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தக் கூடியதாக அமையும்.

அதற்கமைய, ஒரு பிரிவெனாவுக்கு குறைந்தது இரண்டு கணணிகள், ஸ்மார்ட் திரை மற்றும் அச்சு இயந்திரமொன்றையும் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவத்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதியும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.