ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாம் பயணம்!

253 0

வியட்நாம் பிரதமர் குயென் ஷுஎன் பூவின் அழைப்பை ஏற்று, ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 19ம் திகதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை உறுதி செய்து வர்த்தகம், பொருளாதாரம், கைத்தொழில் ஆகிய துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இதன்போது வியட்நாம் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரையும் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், இந்த விஜயத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், ஹரின் பெர்ணான்டோ மற்றும் மஹிந்த அமரவீர போன்றோரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.