அருந்ததிராயிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளபெறவேண்டும்

27 0
எழுத்தாளர் அருந்ததி ராயிற்கு எதிராக வழக்குதொடருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெறவேண்டும் என 200க்கும் இந்திய கல்விமான்களும் பத்திரிகையாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய அரசாங்கம் கடந்த வாரம் நாட்டின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அருந்ததி ராயிற்க்கு எதிராக வழக்கு தொடர்வதற் கு அனுமதிவழங்கியிருந்தது.

இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம்,எங்கள் நாடு தொடர்பான எந்த விடயம் குறித்தும் அச்சமின்றி சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என அரசாங்கத்திற்கும் நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளிற்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என கல்விமான்களும் சிவில்சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் தங்கள் பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அருந்ததி ராய்க்கு எதிராகவழக்கு தொடர்வது என்ற முடிவை நியாயப்படுத்த முடியாது என இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள  வரலாற்று பேராசிரியர் அஜய் டன்டேகர் தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை இந்திய அரசமைப்பு உறுதிசெய்கின்றது என தெரிவித்துள்ள அவர் இந்தியா ஒரு அரசமைப்பு ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயிற்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து விவசாயிகள் அமைப்பொன்றும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது,புதுடில்லி பெங்களுரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அருந்ததி ராயிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை கடந்த வாரம புதுடில்லி ஆளுநர் வினய் குமார் சக்சேனா வழங்கியிருந்தார்.

2010 இல் கருத்தரங்கொன்றில் தெரிவித்த கருத்துக்களிற்காகவே அருந்ததி ராயிற்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்கு தாக்கல் செய்வதற்கு புதுடில்லி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

காஸ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருபகுதியாகயிருந்ததில்லை என அருந்ததி ராய் தெரிவித்திருந்தார்.