ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண தான் அரசாங்கத்துடன் இணைந்து சுகாதார அமைச்சராவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை நிராகரித்துள்ளார்.
ராஜித சேனாரட்ண ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அவர் அரசாங்கத்துடன் இணைந்து சுகாதார அமைச்சராகவுள்ளார் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.
ராஜித சேனாரட்ண ஜனாதிபதியை பாராட்டி கருத்து வெளியிட்டு வருகின்றார்,
எனினும் இந்த ஊகங்களை நிராகரித்துள்ள ராஜிதசேனாரட்ண அமைச்சர் பதவி குறித்தோ அல்லது வேறு விடயங்கள் குறித்தோ அரசாங்கத்துடன் எந்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் நெருங்குகின்ற நிலையில் அரசியல் மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் நான் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை ஜனாதிபதி முன்னெடுத்துள்ள திட்டங்;கள் குறித்து அவருடன் மாத்திரம் பேசியுள்ளேன் என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.