அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் மேயர் பாரதிக்கலைக்கூடமும் இணைந்து நாடாத்திய தமிழ்க்கலை மதிப்பளிப்பு விழா யேர்மனி.

994 0

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் மேயர் பாரதிக்கலைக்கூடமும் இணைந்து நாடாத்திய தமிழ்க்கலை மதிப்பளிப்பு விழா யேர்மனி நெற்றற்ரால் நகரில் 22.6.2024 அன்று நடைபெற்றது.

இம்மதிப்பளிப்பில் ஆற்றுகைத் தேர்வு நிறைவு செய்த 61 மாணவர்களுக்குக் கலைமணி விருதுகள் வழங்கப்பட்டன. அத்தோடு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணியாற்றிவரும் கலைஆசிரியர்களுக்கு ”கலைச்சுடர்” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

விருதுபெறும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம் மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது.

மதிப்பளிப்பினை கனடாவிலிருந்து வருகைத் தந்திருந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, ஏனைய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் தமிழ்க்கலை ஆசிரியர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.