பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப செயற்றிட்டத்தின் கீழ், 251ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய தேசிய பாடசாலை வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 22ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்துவரும்போது பாராளுமன்றத்திலும் வெளியிலும் என் மீது கோபத்தை வெளிப்படுத்தி குரோதம் காட்டுகின்றனர். நான் பிள்ளைகளுக்கு மது, போதைப்பொருள், சிகரெட்டை பகிர்ந்தளிக்கவில்லை. கணினிகள், அகராதிகளையே பகிர்ந்தளிக்கிறேன். இவை தவறான விடயங்கள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆட்சியாளர்கள், தலைநகரின் ஆடம்பர குளிரூட்டி அறைகளில் இருந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட கும்பலுடன் டீலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நாட்டிலுள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர் மட்டத்தை அடைவதை அவர்கள் விரும்பவில்லை. காலத்துக்கேற்ற நவீன கல்வியை வழங்காது, பழமைவாத கல்வியை வழங்குவதன் மூலம் இந்த பிள்ளைகளை அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அனைத்தும் தற்போது அரசாங்கத்துடன் டீலில் ஈடுபட்டுள்ளன. மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்து மக்களையே காட்டிக்கொடுக்கும் அரசியல் கலாசாரம் இந்நாட்டில் காலாகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையை மாற்றியமைப்போம். பணத்துக்காக பிள்ளைகளையும் மக்களையும் ஏமாற்றி அவர்களின் கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் அரசியலும், டீல் அரசியலும் நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நல்ல நல்ல அரசியல் டீல்களை எதிர்காலத்தில் கண்டுகொள்ளலாம். தமது சுய கௌரவத்துக்கு துரோகம் இழைத்து டீல் பேசும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.