சுற்றுலாவுக்கு பிரபலமான சுவிட்சர்லாந்தில் பெண் சுற்றுலாப்பயணி மீது வன்முறைத் தாக்குதல்

36 0

சுற்றுலாவுக்கு பிரபலமான நாடான சுவிட்சர்லாந்தில், சுற்றுலாப்பயணி ஒருவர் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த 50 வயதுகளிலுள்ள பெண்ணொருவரிடம் நடத்தப்பட்ட கொள்ளை முயற்சியின்போது, அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நபர் அந்தப் பெண்ணின் பையை பறிக்க முயல, அவர் தடுக்க, அவரைக் கத்தியால் குத்தியுள்ளார் அந்த நபர். தரையில் விழுந்தும், உதவி கோரி சத்தமிட்டபடி, தன்னைத் தாக்கும் அந்த நபரிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அந்த பெண் போராடிய காட்சியைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது என்கிறார் அந்தக் காட்சியைக் கண்ணால் கண்ட உள்ளூர் கடைக்காரர் ஒருவர்.

அவர் சத்தமிட்டதைக் கேட்டு அக்கம் பக்கதவர்கள் ஓடி வந்து தாக்குதல்தாரியை பிடிக்கமுயன்றும் தப்பியோடியுள்ளார் அவர். என்றாலும், சிறிது நேரத்திற்குள் பொலிசார் அவரைப் பிடித்துவிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் பயங்கரமாக தாக்கப்படுவது, இது இரண்டாவது முறையாகும். பிப்ரவரியில், அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவர் ஜெனீவாவில் அடித்துத் துவைக்கப்பட்டு பின் வன்புணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.