கீமோதெரபி சிகிச்சைக்குப் பின்பும் இத்தனை அழகா? இளவரசி கேட் தொடர்பில் இணையத்தில் எழுந்துள்ள சர்ச்சை

26 0

பிரித்தானிய இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டார் என கருதப்பட்டதற்கு மாறாக, அவர் மன்னர் சார்லசின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். ஆனால், வெள்ளை உடையில் அழகே உருவாக தேவதை போல் அவர் காணப்படும் காட்சிகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்கள் சிலர்!

கீமோதெரபி சிகிச்சைக்குப் பின்பும் இத்தனை அழகா?

 

இளவரசி கேட், புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்துவருகிறார். கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டால் முடி கொட்டிவிடும் என பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது.

ஆகவே, மன்னர் சார்லசின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட இளவரசி கேட்டுக்கு முடி கொட்டவில்லையே, எப்படி அவருக்கு இன்னும் இவ்வளவு அழகான நீளமான முடி இருக்கிறது என சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

ஒரு சிலர், அவர் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் அழகியல் சிகிச்சை செய்துகொண்டிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்கள். சிலர், வெளியான புகைப்படங்கள் AI உதவியுடன் மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்றும், வேறு சிலர் இது கேட்டே அல்ல, அவரது டூப் என்றும் ஆளாளுக்கு கருத்து தெரிவித்து வர, மீண்டும் இளவரசி கேட் இணையத்தில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

ஆனால், எல்லா கீமோதெரபி சிகிச்சையிலும் முடி கொட்டாது என்கிறார்கள் மருத்துவர்கள்.