முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இருவர் படுகாயம்

29 0

கொட்டாவை – கல்கிஸ்ஸை  வீதியில் மிரிஸ்வத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (20) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.