பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள தானங்கள் தொடர்பில் வெளியான தகவல்

28 0

 பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானங்களை வழங்க ஏற்பாடு செய்பவர்கள் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதிவு செய்யுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை நாடளாவிய ரீதியில் 4,600க்கும் மேற்பட்ட தானங்கள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானங்களை பரிசோதனைக்குட்படுத்த 2,800 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் பிரதேசத்திற்கு அதிகளவான பக்தர்கள் வருகை தருவதால் அநுராதபுரம் பிரதேசத்தில் வழங்கப்படவுள்ள தானங்கள் அதிகமாக பரிசோதனைக்குட்படுத்தப்படும்.

மேலும், அநுராதபுரம் பிரதேசத்தில் வழங்கப்படவுள்ள அனைத்து தானங்களும் அநுராதபுரம் நகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.