இலங்கை, மாலைதீவு, நேபாளத்திற்கான உலக வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக டேவிட் சிஸ்லென்

42 0
இலங்கை, மாலைத்தீவு, நேபாளத்திற்கான உலக வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக டேவிட் சிஸ்லென் (David Sislen) நியக்கமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் எதிர்வரும் ஜூலை மாதம்  முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.

டேவிட் சிஸ்லென் அமெரிக்கா மற்றும் இத்தாலியின் இரட்டை குடியுரிமை பெற்றவர் என்பதுடன் இவர் 2001 ஆம் ஆண்டில் உலக வங்கியில் தனது பணியை ஆரம்பித்தார்.

தனது புதிய பதவி தொடர்பில் டேவிட் சிஸ்லென் தெரிவிக்கையில்,

எனது சேவையைச் சிறப்பாக வழங்க நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேலும், உலக வங்கியின் நிர்வாக தலைவர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளேன். உலக வங்கியின் அனைத்து திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதே எனது நோக்கம் என்றார்.