கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் மோதி காயப்படுத்தி விட்டு தப்பியோடிய சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் பிரபல பாடசாலை ஒன்றின் முன் கடமையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் மோதி காயப்படுத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
குறித்த நபர் தப்பி ஓடிய போதிலும் அவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை ப் பெற்று இலங்கை மோட்டார் போக்குவரத்து சபை திணைக்களத்தின் ஊடாக குறித்த நபரின் விவரங்களை அறிந்து பின்னர் அவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் செலுத்து வந்த மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.