ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதை எதிர்க்கும் மூன்று பலமிக்க நாடுகள்!!

277 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முதலீட்டுக்காக சீனாவுக்கு வழங்குவதை இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏதோ ஒரு வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டு அங்கு வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், துறைமுகத்தின் முழுமையான கட்டுப்பாடு, பாதுகாப்பு, உட்புகுதல், வெளியேறுதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என இந்த நாடுகள் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளன.

சீனா இதற்கு முன்னர் பாகிஸ்தானின் கவ்டார் துறைமுகத்தில் இப்படியான முதலீடு ஒன்றை செய்துள்ளது.

இது பிராந்திய பாதுகாப்பு பலம் தொடர்பான சமநிலைக்கு பாரிய தடையாக இருப்பதன் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதை அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தியில் முதலீடுகளை செய்யுமாறு அரசாங்கம், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு தொடர்ந்தும் வழங்கவும் அரசாங்கம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.