வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம் காலமானார்

330 0

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்  திரு.கந்தசாமி சிவப்பிரகாசம் தனது 82 ஆவது வயதில் நேற்று 14  ஆம்திகதி அமரிக்காவின் வெர்ஜீனியா நகரில் இயற்கை எய்தினார்.

இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் இன்று வரை தனக்கென தனி முத்திரை பதித்து வரும் வீரகேசரி பத்திரிகையில் கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை பிரதம ஆசிரியராக  திரு.கந்தசாமி சிவப்பிரகாசம் பணியாற்றியுள்ளார்.

அன்னாரின் பூதவுடல் 16 ஆம் திகதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை  பின்வரும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். இறுதிக்கிரிகைகள் ஒரு வார காலத்தில் Demaine Funeral Home, 10565 Main Street, Fairfax, VA 22030 என்ற முகவரியில் இடம் பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மாதகலை பிறப்பிடாகக் கொண்ட சிவப்பிரகாசம், பேராதனை பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று பட்டதாரி ஆனார். அக்கால கட்டத்தில் பிரதான தமிழ் பத்திரிகைகளாக கொழும்பிலிருந்து வீரகேசரியும், தினகரனும் வெளிவந்து கொண்டிருந்தன. இவர் “லேக் ஹவுஸ்” நிறுவனத்தின் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

திரு.சிவப்பிரகாசம் முதலில் தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர் திரு.எஸ்மன்ட் விக்கிரமசிங்க வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதையடுத்து  வீரகேசரி பத்திரிகையின் உதவி பிரதம ஆசிரியராக திரு.க.சிவப்பிரகாசத்தை நியமித்தார்.

அக்காலத்தில் திரு.கே.வி.எஸ்.வாஸ் என்பவர் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சில காலத்தின் பின்னர் திரு.வாஸ் அவர்கள் ஆசிரியப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் திரு.க.சிவப்பிரகாசம் அவர்கள் பிரதம ஆசிரியர் பதவியைப் பொறுப்பேற்று திறம்பட நடாத்தி வந்தார்.

இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் முதலாவது பத்திரிகை என்ற பெயரினையும், புகழையும் பெற்றது. அத்துடன் மித்திரன் என்ற மாலைப் பத்திரிகையினையும் ஆரம்பித்தார். அப்புகழ் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது.