எங்கள் பிள்ளைகள் எங்கே?, சம்பந்தன் ஐயாவே உங்களுக்கு சம்பந்தம் இல்லையா? காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, போராட்டம் நேற்றும் 50ஆவது நாளாக…(காணொளி)

324 0

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில்  நேற்றும் 50ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கல் என்பவற்றை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் 50ஆவது நாளான நேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் ஆதரவாளர்கள் வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஊர்வலமாக பசார் வீதி வழியாக கொரவப்பொத்தான வீதியை வந்தடைந்து அங்கிருந்து வவுனியா நீதிமன்றத்தின் வழியாக உண்ணாவிரதம் நடைபெறும் மேடையை வந்தடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட தங்கள் உறவுகளின் படங்களை ஏந்தியவாறு உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திலிருந்து வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று அங்கு வழியாட்டில் ஈடுபட்டதன் பின்பாக எங்கே எங்கே? எங்கள் பிள்ளைகள் எங்கே?, சம்பந்தன் ஐயாவே உங்களுக்கு சம்பந்தம் இல்லையா? காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, அரசியல் கைதிகளை விடுதலை செய், ஐம்பது நாட்கள் கடந்தும் எங்கள் அழுகுரல் கேட்கவில்லையா? போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.