அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (12) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இந்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பாடசாலையில் வழங்கப்படும் காலை உணவை உட்கொண்டு சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் காலை உணவுக்காக நெத்தலி கருவாடு, வெண்டைக்காய் மற்றும் முருங்கைக் கீரை உள்ளிட்ட உணவு வகைகளை உட்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் அனைவரும் சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.