ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நாட்டின் வெற்றி, தோல்வியையே தீர்மானிக்கும்

43 0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார சீர்த்திருத்த துறைசார் மேற்பார்வைக்  குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன்  பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.