கொட்டாவை -மாகும்புர அதிவேக வீதியில் பஸ் விபத்து ; ஐந்து பேர் காயம்

37 0

கொட்டாவை – மாகும்புர அதிவேக வீதியில் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (12) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

பாதுக்கவிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று பஸ் தரிப்பிடத்திற்குள் உள்நுழைய முயன்ற போது இந்த பஸ்ஸானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த கட்டிடமொன்றில் மோதி பின்னர் மற்றுமொரு பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தினால் பஸ் தரிப்பிடத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பஸ் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.