தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 உடற்கட்டழகர்கள் பங்குபற்றிய தெற்காசிய உடற்கட்டழகர் மற்றும் உடற்தகுதி சம்பியன்ஷிப் போட்டி மாலேயில் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இலங்கை உடற்கட்டழகர்கள் மூவரில் இருவர் நேற்றுமுன்தினம் இரவு நாடு திரும்பினர்.
180 சென்றி மிற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சஹான் தில்ருக் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
182 சென்றி மிற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புத்திக்க ப்ரசன்ன தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அவர்களைவிட 175 சென்றி மீற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள் போடடியில் இலங்கையின் விஷ்வா தாருக்க வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இந்த மூவரில் தங்கப் பதக்கம் வென்ற சஹன் தில்ருக் தான் தொழில் புரியும் துபாய் நொக்கிப் பயணமானார்.
மற்றைய இருவரும் இலங்கை வந்தடைந்தனர்.