யாழ். வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு ; இளைஞன் படுகாயம் !

62 0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில்,  வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று  திங்கட்கிழமை (10)  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்  வன்முறை கும்பால் இந்த வாள் வெட்டு தாக்குதலை  மேற்கொண்டுள்ளனர் .

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு  தப்பி சென்றுள்ளனர் .

வாள் வெட்டு  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.